ஆதார், பான் எண்ணைத் திருடி நூதன மோசடி: ரூ.4.70 கோடி ஜிஎஸ்டி செலுத்துமாறு ஓட்டுநருக்கு நோட்டீஸ்

0
20

ஜிஎஸ்டி ரூ.4.70 கோடி செலுத்த வேண்​டும் என்று நோட்​டீஸ் வந்​த​தால் கார் ஓட்​டுநர் அதிர்ச்சி அடைந்​தார். வேலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கார் ஓட்​டுநர் கமல​நாதன் (36).

கடந்த 10 ஆண்​டு​களாக திரு​வேற்​காடு அடுத்த புளி​யம்​பேடு நூம்​பல் பகு​தி​யில் மனை​வி, 2 குழந்​தைகளு​டன் வசித்து வரு​கிறார். இந்நிலை​யில், வேலூரில் உள்ள அவரது சொந்த வீட்டு முகவரிக்கு கடந்த பிப்​ர​வரி மாதம் ஜிஎஸ்டி அலு​வல​கத்​தில் இருந்து ஒரு கடிதம் வந்​துள்​ளது.

அதில், ‘கமல​நாதன் ரூ.4.70 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்​டும்’ என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த அவர் உடனடியாக ஜிஎஸ்டி அலுவலகத்தை அணுகி விளக்​கம் கேட்​டுள்​ளார்.

அடை​யாளம் தெரி​யாத நபர்ஒரு​வர் கமல​நாதனின் ஆதார், பான் அட்டை விவரங்​களை பயன்​படுத்தி அவரது பெயரில் ஜிஎஸ்டி பதிவு செய்​து, ஓசூர், திருப்​பூரில் நிறு​வனம் தொடங்கி தொழில் செய்து வந்​துள்​ளார்.

திருப்​பூரில் கமல் என்​டர்​பிரைஸ் என்ற பெயரில் ஏற்​றுமதி – இறக்​குமதி நிறு​வனம் நடத்தி வந்​த​தாக​வும், பின்​னர் அதை நிறுத்​தி​விட்​டதும் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, ஜிஎஸ்டி அலு​வலக அதி​காரி​கள் மற்​றும் அதைத் தொடர்ந்​து, வானகரம் போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யபடி, சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் கமல​நாதன் நேற்று புகார் கொடுத்​தார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​போது, “ரூ.4.70 கோடி ஜிஎஸ்டி வரி கட்ட வேண்​டும் என்று எனக்கு நோட்​டீஸ் வந்​துள்​ளது.

எனது ஆதார், பான் விவரங்​களைத் திருடி மோசடியில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here