குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.














