ஸ்​டாண்ட் அப் காமெடியனின் காதல் கதை

0
18

‘பிக் பாஸ்’ நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றவரும் ஸ்டாண்ட் அப் காமெடியனு​மான விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ என்ற படம் மூலம் கதை​யின் நாயக​னாக அறி​முக​மாகிறார். கே.சி. குரு இயக்​கும் இப்​படத்​தில் ஃபிட்​னஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா நாயகி​யாக நடிக்​கிறார்.

பிரமோத் கோடியன் ஒளிப்​ப​திவு செய்​யும் இந்​தப் படத்துக்கு சரவணன் சுப்​பிரமணி​யம் இசையமைக்கிறார். ரொமான்​டிக் காமெடி படமாக உருவாகும் இதை, ஹிதா ஸ்டூடியோஸ் தயாரிக்​கிறது. சாகர் சந்​தேஷ் – ஜி.​திம்மா ரெட்டி இணை தயாரிப்பு செய்கின்​றனர். இப்​படத்​தின் டைட்​டில் வெளி​யீட்டு விழா சென்னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர்.

நடிகர் விக்​கல்ஸ் விக்​ரம் கூறும்​போது, ‘‘2016-ம் ஆண்​டில் தியேட்​டர் ஆர்​டிஸ்ட் ஆக இருந்​தேன். பிறகு சோசி​யல் மீடியா​வில் பிரபல​மானேன். பிக் பாஸ் மூலம் இன்​னும் பிரபலமடைந்​தேன். அதன் மூலம் இந்​தப் பட வாய்ப்​புக் கிடைத்​தது. எனக்கு இப்​படத்​தின் இயக்​குநரைச் சமீபத்தில் தான் தெரி​யும்.

அவர் ‘லைட் வெயிட் பேபி’ படத்​தின் கதையைச் சொன்னதும் பிடித்​துப் போனது. இப்​படத்​தின் போஸ்​டரில் மைக் இருக்​கிறது, ஸ்டாண்ட் இருக்​கிறது, அப்​புறம் அதில் வெயிட் இருக்​கிறது. இது லவ் ஸ்டோரி. ஸ்டாண்ட் அப் காமெடியனுக்​கும் பெண் பாடி பில்​டருக்​கும் இடையி​லான கதை​தான் படம். அதனால் தான் நான் இதில் ஹீரோ​வாகி இருக்​கிறேன்” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here