ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் வீரர் சோட்ரானி, போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ரஃபேல் காண்ட்ராவுடன் மோதினார். அதில் வீர் சோட்ரானி 11-8, 11-7, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அதேவேளையில் மற்ற இந்திய வீரர்களான அபய் சிங் 9-11, 11-7, 4-11, 2-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் சேம் டோடிடமும், ரமித் டான்டன் 10-12, 11-4, 5-11, 9-11 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் பாலாஸ் ஃபர்காஸிடமும் தோல்வி அடைந்தனர். மகளிர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 9-11, 7-11, 11-9, 4-11 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் ஜோயல் கிங்கிடம் வீழ்ந்தார்.














