ஏழுமலையான் கோயிலில் மே 1 முதல் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய ஆலோசனை

0
32

கோடை காலத்​தில் திருப்​பதி ஏழு​மலை​யான் கோயிலில் பக்​தர்​களின் கூட்​டம் நாளுக்கு நாள் அதி​கரித்து வருகிறது.

இதனால் வரும் மே 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை தொடர்ந்து 2 மாதங்​களுக்கு விஐபி பிரேக் தரிசனம் மற்​றும் ஸ்லாட்​டட் சர்வ தரிசனம் (எஸ்​எஸ்​டி) அதாவது சர்வ தரிசனத்திற்கு திருப்​ப​தி​யில் டோக்​கன் வழங்​குதலை நிறுத்த தேவஸ்​தானம் திட்​ட​மிட்​டுள்​ளது. இதனால் முன்கூட்​டியே சர்வ தரிசன டோக்​கன்​கள் வழங்​காமல், நேரடி​யாக சர்வ தரிசன முறையை அமல்​படுத்த உள்​ளது. இதனால் கடந்த 3 ஆண்​டு​களில் கோடை விடு​முறை​யில் அமல்​படுத்​திய முறை​களை தேவஸ்தானம் ஆய்வு செய்து வரு​கிறது.

அதன்​படி கடந்த 3 ஆண்​டு​களில் கோடை விடுறை​யில், அதாவது மே, ஜூன் மற்​றும் ஜூலை மாதங்​களில் மட்​டும் சராசரி​யாக 23- 24 லட்​சம் பக்​தர்​கள் சுவாமியை தரிசித்​துள்​ளனர்.

தற்​போது விஐபி பிரேக் தரிசனத்​திற்​காக தின​மும் 2 முதல் 3 மணி நேரம் ஒதுக்​கப்​படு​கிறது. இதன் மூலம் 3,800 பக்​தர்​கள் சுவாமியை தரிசிக்​கின்​றனர். இதை ரத்து செய்​வதன் மூலம் 15 ஆயிரம் பக்தர்கள் தர்ம தரிசனம் மூலம் சுவாமியை தரிசனம் செய்யலாம். இதனால் கோடை​யில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்​வது பற்றி தேவஸ்​தானம் ஆலோ​சித்து வரு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here