மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு

0
22

மகிளா காங்​கிரஸ் தலை​வர் பதவி​யில் இருந்து ஹசீனா சையத்தை நீக்கி கட்சி மேலிடம் உத்​தர​விட்​டுள்​ளது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் உரிய வாய்ப்பு வழங்​கப்​பட​வில்லை எனக் கூறி கருப்பு உடை அணிந்​து, மகிளா காங்​கிரஸார் சென்னை கோயம்​பேட்​டில் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​தனர்.

அப்​போது மகிளா காங்​கிரஸ் தலை​வர் ஹசீனா சையத் கூறிய​தாவது: மேற்கு வங்​கம், கேரளம், அசாமில் பெண்​களுக்கு உரிய முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டு, மகிளா காங்​கிரஸ் மாநிலத் தலைவி​கள் போட்​டி​யிட வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால் தமிழகம், புதுச்​சேரி​யில் மகிளா காங்​கிரஸ் திட்​ட​மிட்டு ஓரங்கட்​டப்​பட்​டுள்​ளது.

கிருஷ்ணகிரி அல்​லது மயி​லாடு​துறை தொகு​தி​யில் போட்​டி​யிடு​வதற்​கான அனைத்து பணி​களை​யும் நான் மேற்​கொண்டு வந்​தேன். ஆனால், மகிளா காங்​கிரஸ் நிர்​வாகி​கள் யாருக்​கும் வாய்ப்​பளிக்​க​வில்​லை.

மாணவர் பரு​வம் முதல் கடந்த 30 ஆண்​டு​களாகக் கட்​சிக்​காக உழைத்து வரு​கிறேன். நாங்​கள் வாய்​மூடி இருப்​ப​தாலேயே எங்​களுக்கு மிகப்​பெரிய அநீதி இழைக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை பதில் சொல்​லியே தீர வேண்​டும்.

மேலூர் தொகுதி நான் இஸ்​லாமியச் சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்​ப​தால் இப்​படிச் செய்​கிறீர்​களா? கடந்த 5-ம் தேதி மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் எனக்​குப் போன் செய்​து, மேலூர் தொகுதி உனக்​குத்​தான் என்று கூறி ஆவணங்​களைத் தயார் செய்​யச் சொன்​னார். ஆனால், கடைசி நேரத்​தில் வேறு ஒரு​வரை அறி​வித்​து​விட்​டார்​கள்.

தேசி​யத் தலை​வரும், மாநிலத் தலை​வரும் இணைந்து எங்​களுக்​குத் துரோகம் செய்​துள்​ளார்​கள். நாங்​கள் ஏற்​கெனவே ராஜி​னாமா கடிதத்தை அனுப்​பி​விட்​டு​தான் இங்கு வந்​துள்​ளோம். நான் கட்​சியை விட்​டுச் செல்​ல​வும் தயா​ராக உள்​ளேன்.

நாங்​கள் மதிக்​கும் தலை​வர் ராகுல் காந்​தியை விமான நிலை​யத்​தில் சென்று வரவேற்​கக்​ கூட செல்​வப்​பெருந்​த கைக்கு மனமில்​லை. அவர் கோட்​சேவைப் போல செயல்​படு​கிறார், இவ்​வாறு அவர் கூறி​னார். இதற்​கிடையே மகிளா காங்​கிரஸ் மாநிலத் தலை​வர் பதவி​யில் இருந்து ஹசீனா சையத் நீக்​கப்​பட்​டுள்​ளார்.

இது தொடர்​பாக அகில இந்​திய மகிளா காங்​கிரஸ் தலை​வர் அல்கா லம்பா வெளி​யிட்ட அறிக்​கை​யில், “தமிழ்​நாடு மாநில மகிளா காங்​கிரஸ் தலை​வ​ராக இருக்​கும் ஹசீனா சையத், கட்​சிக்கு எதி​ரான நடவடிக்​கை​களில் ஈடு​பட்​ட​தால், பதவியி​லிருந்து அவர் நீக்​கப்​படு​கிறார்​. கட்​சி​யின்​ வி​தி​முறை​களின்​படி, தேவைப்​படும்​ பட்​சத்​தில்​ மேல​திக நடவடிக்​கைகள்​ எடுக்​கப்​படும்​” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here