“அவர்கள்தான் ஸ்பெஷல்” – பஞ்சாப் கிங்ஸின் இளம் இந்திய வீரர்களை பாராட்டிய ரிக்கி பாண்டிங்

0
94

 பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டரில் விளையாடும் இளம் இந்திய வீரர்கள்தான் தங்கள் ஸ்பெஷல் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025 சீசனில் அணியை மீண்டும் கட்டமைத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. புதிய கேப்டன், புதிய வீரர்கள் என அந்த அணி புதுப்பொலிவு பெற்றது. அதே பாய்ச்சலோடு உச்சமாக விளையாடிய அந்த அணி கடந்த சீசனில் இறுதிக்கு முன்னேறி அசத்தியது. நடப்பு சீசனிலும் முதல் இரண்டு ஆட்டங்களில் வென்று வெற்றி நடையை தொடர்கிறது.

“பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டரில் விளையாடும் இளம் இந்திய திறமையாளர்களே எங்களது ஸ்பெஷல். கடந்த சீசன் முதலே பிரியன்ஷ் ஆர்யாவும், பிரப்சிம்ரன் சிங்கும் அணியின் அங்கமாக உள்ளனர். கடந்த சீசனில் பஞ்சாப் அணியை மீண்டும் கட்டமைக்க வேண்டி இருந்தது. இரண்டு வீரர்களை மட்டுமே எங்கள் அணி கடந்த சீசனில் தக்கவைத்தகத்து. மற்ற அனைவரையும் ஏலம் மூலம் தேர்வு செய்தோம். அதன் மூலம் நான் பணியாற்ற விரும்பும் வீரர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

அதோடு அணியின் இந்திய சீனியர் வீரர்கள் இடம்பெறச் செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அதில் ஷ்ரேயஸ் ஐயர் முதல் இடத்தில் இருந்தார். அவரோடு சேர்த்து சஹல், அர்ஷ்தீப் ஆகியோரையும் பெற்றோம்” என சிஎஸ்கே அணி உடனான வெற்றிக்கு பிறகு

இந்த சீசனில் குஜராத் மற்றும் சென்னை அணியை வீழ்த்தி உள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதில் பிரப்சிம்ரன் சிங் 37 மற்றும் 43 ரன்கள் எடுத்திருந்தார். சிஎஸ்கே உடனான ஆட்டத்தில் பிரியன்ஷ் ஆர்யா, 11 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ஷ்ரேயஸ் மற்றும் கூப்பர் கானோலி ஆகியோரும் அந்த அணிக்காக பேட்டிங் ஆர்டரில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here