ரூ.250 கோடியை வாங்கிக் கொண்டு அர்ஜெண்டினா அணி ஏமாற்றிவிட்டது: கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

0
31

பணம் பெற்​றுக்​கொண்டு கேரளா​வுக்கு வந்து விளை​யா​டா​மல் அர்ஜெண்டினா கால்​பந்து அணி ஏமாற்​றி​விட்​ட​தாக கேரள விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் வி.அப்துரஹி​மான் தெரி​வித்​துள்​ளார்.

அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யும் நட்​சத்​திர வீர​ரான லயோனல் மெஸ்​ஸி​யும் கடந்த மார்ச் மாதம் கேரளா​வுக்கு வருகை தரு​வார்​கள் என கேரள விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் அப்​துரஹி​மான் கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பர் மாதம் தெரி​வித்​திருந்​தார். ஆனால் திட்​ட​மிட்​டபடி அர்​ஜெண்​டினா அணி கடந்த மாதம் கேரளா வரு​கை தரவில்லை.

இந்​நிலை​யில் அப்​துரஹி​மான் நேற்று தொலைக்​காட்சி ஒன்​றுக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: அர்ஜெண்​டினா கால்​பந்து அணி​யும், லயோனல் மெஸ்ஸியும் கேரளா​வுக்கு வந்து ஒரு போட்​டி​யில் விளையாட வேண்​டும் என்று நான் மனதார விரும்​பினேன். மெஸ்சி மற்​றும் அர்​ஜெண்​டினா அணியை வரவழைக்க பல கட்ட பேச்​சு​வார்த்​தைகளை நடத்​தினேன்.

அர்​ஜெண்​டினா அணிக்கு வழங்​கப்பட வேண்​டிய ரூ.250 கோடியை திரட்​டு​வதற்கு ஸ்பான்​சர்​களை ஏற்​பாடு செய்​வது கடின​மாக இருந்​தது. ஆனால், அந்​தப் பணத்​தைப் பெற்​றுக் கொண்ட பிறகு, அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி எங்​களை ஏமாற்​றி​விட்​டது. அவர்​களிடம் இருந்து இப்​படி ஒரு துரோகத்தை நாங்​கள் எதிர்​பார்க்​க​வில்​லை. வரு​வ​தாக வாக்​குறுதி அளித்​து​விட்​டு, வராமல் போனது மிகப்​பெரிய ஏமாற்​றம்.

இது குறித்து நான் விசா​ரித்​த​போது, அர்​ஜெண்​டினா அணி இதே​போன்று 5 நாடு​களை ஏமாற்றி இருப்​பதை கண்டறிந்தேன். அவர்​கள் அந்த நாடு​களில் இருந்து பணத்தைப் பெற்​றுக்​கொண்டு விளை​யாடச் செல்லவில்லை. இதுதொடர்​பாக அர்​ஜெண்​டினா கால்​பந்து அணிக்கு எதி​ராக வழக்​கைப் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் அவர்​கள் நமக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும். இது கேரளா​வில் உள்ள கால்​பந்து ரசிகர்​களைப் பெரும் ஏமாற்றமடையச் செய்​துள்​ளது. இந்​த ஏ​மாற்றத்தை யாரிடம்​ சொல்​வது என்​று எனக்​குத்​ தெரிய​வில்​லை. இவ்வாறு அவர்​ கூறியுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here