நிலவுக்கு வீரர்களை அனுப்பியது நாசா

0
30

நில​வுக்கு கடைசி​யாக நாசா கடந்த 1971-ம் ஆண்டு அப்​போலோ விண்​கலம் மூலம் 3 வீரர்​களை அனுப்பியது. 50 ஆண்டுக்கு ​பின் தற்​போது ஆர்​டெமிஸ்-2 திட்​டத்​தின் கீழ் எஸ்​எல்​எஸ் ராக்​கெட் மூலம் ஓரி​யான் விண்​கலத்தை நில​வுக்கு நாசா நேற்று பரிசோதனை முயற்​சி​யாக அனுப்பியது. இந்த விண்​கலத்​தில் நாசா கமாண்​டர் ரீட் வைஸ்​மேன், பைலட் விக்​டர் க்ளேவர், கிறிஸ்​டினா கோச், கனடா விண்​வெளி வீரர் ஜெரிமி ஹேன்​சன் ஆகியோர் பயணம் செய்​தனர்.

இந்த 4 வீரர்​களும் 10 நாள் பயணம் மேற்​கொண்டு நிலவை சுற்றி பயணம் செய்​வர். ஆனால், நில​வில் தரை​யிறங்க மாட்​டார்​கள். அதற்கு பதில் நில​வைச் சுற்றி 6 லட்​சம் மைல்​கள் தூரம் பயணம் செய்​து, நில​வின் மேற்​பரப்பை படம் பிடிப்​பர். மேலும் எதிர்​கால திட்​டங்​களுக்​கான முக்​கிய தகவல்​களை சேகரிப்​பர். நிலவை சுற்றி வந்​த​பின் விண்​கலம் பசிபிக் கடலில் வரும் 11-ம் தேதி பா​ராசூட் மூலம் விழும். அதை அமெரிக்​க கடற்​படை​யினர்​ மீட்​பர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here