குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் ஏப்ரல் 23 அன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் கண்டிப்பாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துறை அலுவலர்கள் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனர். வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.














