மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் நடிகர் அஜித்குமார் வழிபாடு

0
29

 மல்​லிகேஸ்​வரர் கோயி​லுக்கு வந்த நடிகர் அஜித்​கு​மாரை ரசிகர்​கள் சூழ்ந்​து​கொண்​ட​தால் அவசர, அவசர​மாக வழி​பாடு செய்து ருத்​தி​ராட்ச மாலையை பெற்​றுக்​கொண்டு கிளம்பினார்.

தமிழகத்தை சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித்​கு​மார் கார் பந்தய வீர​ராக உள்​ளார். இவர், அடுத்த வாரம் இத்​தாலி​யில் கார் பந்தய போட்​டி​யில் பங்​கேற்க உள்​ளார்.

இந்த கார் பந்தய போட்​டி​யில், நடிகர் அஜித் வெற்றி பெற வேண்​டும் என அவரது நண்​பர் கார்த்​தி​கேயன் என்​பவர், மாமல்​லபுரம் மல்​லிகேஸ்​வரர் கோயி​லில் சிறப்பு வழி​பாடு செய்​து, ருத்​ராட்ச மாலை வழங்​கு​வ​தாக வேண்டி கொண்​ட​தாக தெரி​கிறது.

இதன்​பேரில், ருத்​ராக் ஷ மாலையை பெற்​றுக்​கொண்​டு, சிவனை வழி​பாடு செய்ய நடிகர் அஜித் நேற்று மாலை கோயிலுக்கு வந்​தார். மேலும், கோயி​லில் பிரதோஷ வழி​பாட்​டில் பங்​கேற்க வந்த பக்​தர்​கள், நடிகர் அஜித் வந்​ததை பார்த்து அவரை சூழ்ந்​து கொண்​டனர்.

எனினும், பாது​காப்​புடன் மூல​வர் சந்​நி​திக்கு சென்ற அஜித்​துக்கு மாலை அணி​வித்து ருத்​ராட்ச மாலை வழங்​கப்​பட்​டது. அதைப் பெற்​றுக்​கொண்​டு, கோயி​லில் இருந்து வெளி​யேற முயன்​ற​போது, பக்​தர்​கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்​றனர்.

இதனால், தர்ம சங்​கடத்​தில் மூல​வர் சந்​நி​தியி​லிருந்து வெளி​யேற முடி​யாமல் 10 நிமிடங்​கள் அங்​கேயே நின்​றிருந்​தார். பிறகு, அங்​கிருந்து வேக​மாக சென்​றார்.

அப்​போது, கோயி​லில் இருந்தவர்​கள் அவரை பின்​தொடந்து ஓடிச்​சென்​றனர். பின்​னர், காரில் ஏரி​னார். ஆனாலும், கார் செல்​ல​முடி​யாத அளவில் பொது​மக்​கள் சூழ்ந்து கொண்​டனர்.

இதையடுத்​து, பாது​காவலர்​கள், அனை​வரை​யும் விலக்​கிய​தால் கார் நீலாங்​கரை வீட்​டுக்கு புறப்​பட்டு சென்​றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here