தென்சென்னை கிழக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா: சீட் கிடைக்காததால் அதிருப்தி

0
28

தேர்​தலில் போட்​டி​யிட சீட் கிடைக்​காத​தால் மதி​முக தென் சென்னை கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் கழக.கு​மார் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் கூண்​டோடு ராஜி​னாமா செய்​துள்​ளனர்.

திமுக கூட்​ட​ணி​யில் மதிமுகவுக்கு 4 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்டு வேட்​பாளர்​களும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வைகோ மீது அதிருப்​தியை வெளிப்​படுத்தி மதி​முக தென்​சென்னை கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் கழக.கு​மார் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் கூண்​டோடு ராஜி​னாமா செய்​துள்​ளனர்.

இதுகுறித்து கழக.கு​மார் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திரா​விட இயக்க கொள்​கைகளை ஏற்று திமுக​வில் பயணித்து வந்த நான், 1994-ல் வைகோ​வின் உணர்ச்​சிகர​மான பேச்​சுகளைக் கேட்டு அவருடன்​பயணித்​தேன்.

வைகோவுடன் பேரணி, நடை பயணம் போராட்​டங்​கள் என நெருக்​கடி காலத்​தி​லும் கடந்த 32 ஆண்டு காலம் அவருடன் பயணித்​தேன். கழகமே குடும்​ப​மாக இயங்​கிவந்த எனக்கு உரிய அங்​கீ​காரம் கொடுப்​பேன் என அவர் வாக்​குறுதி அளித்​தார்.

கடும் மனஉளைச்​சல்

2021 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு கொடுக்​க​வில்​லை. அதற்​கு, ‘தவறு செய்து விட்​டேன். நிச்​ச​யம் வரும் தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு தரு​வேன்​’என அப்​போது வாக்​குறுதி அளித்​தார்.

தற்​போது நடை​பெற உள்ள தேர்​தலில் வாய்ப்​பளிப்​ப​தாக 4 மாதங்​களுக்கு முன்பே உறு​தி​யளித்​தார். ஆனால் இந்த தேர்​தலிலும் எனக்​கான வாய்ப்பு மறுக்​கப்​பட்​ட​தால், கடுமை​யான மன உளைச் சலுக்கு ஆளாகி உள்​ளேன்.

எனவே, நான் இது​வரை கட்​சி​யில் வகித்​து​வந்​தஆட்சி மன்​றக் குழு உறுப்​பினர், மாவட்​டச் செய​லா​ளர் ஆகிய பொறுப்​பு​களை நான் மற்​றும்​ அனைத்து மாவட்ட நிர்​வாகிகளும் ராஜினாமா செய்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here