குமரி: விபத்தில் பெண் பலி.. அரசு பஸ் டிரைவருக்கு சிறை

0
69

நாகர்கோவிலில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி, ரவி தனது மனைவி ராணியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசு பேருந்து மோதியதில் ராணி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் ரதீஷ் குமார் மீது வழக்கு பதியப்பட்டது. நாகர்கோவிலில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், நீதிபதி செல்வன் ஜேசுராஜா, ஓட்டுநர் ரதீஷ்குமாருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 7000 அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here