ஆந்திராவில் டிப்பர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 14 பயணிகள் உயிரிழப்பு

0
25

ஆந்​திராவில் நேற்று காலை டிப்​பர் லாரி​ மீது தனியார் பேருந்து மோதிய விபத்​தில், இரு வாக​னங்​களும் தீப்பற்றி எரிந்​தன. இதில் 14 பேர் உயி​ரிழந்​தனர்.

தெலங்​கானா மாநிலம், நிர்​மல் பகு​தி​யில் இருந்து தனி​யார் சொகுசு பேருந்து 41 பயணி​களு​டன் ஆந்​திர மாநிலம் நெல்லூருக்கு நேற்று முன்​தினம் இரவு புறப்​பட்​டது. ஆந்​திர மாநிலம், மார்க்​காபுரம் மாவட்​டம், ராய​வரம் பகு​திக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வந்​த​போது, பேருந்தை ஒரு டிப்​பர் லாரி முந்திச் செல்ல முயன்​றது. அப்​போது டிப்​பர் லாரி​யின் டீசல் டேங்க் மீது பேருந்து மோதி​ய​தில் பேருந்​தும் லாரி​யும் தீப்​பற்றி எரிந்​தன.

உடனே பேருந்​தின் முன் இருக்​கை​களில் அமர்ந்​திருந்த பயணிகள் பேருந்​தில் இருந்து குதித்​தும், இறங்​கி​யும் காயங்களுடன் உயிர் தப்​பினர். ஆனால் பின் இருக்​கை​களில் இருந்​தவர்​களால் உடனே வெளி​யில் வர முடிய​வில்​லை. இதனால் பேருந்​துக்​குள் சிக்​கிய 7 பெண்கள், 5 மாத குழந்தை உட்பட 14 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

தகவலின் பேரில் போலீ​ஸாரும் தீயணைப்பு படை​யினரும் சம்பவ இடத்​துக்கு விரைந்​தனர். ஆம்​புலன்​ஸ்​களும் வரவழைக்​கப்​பட்டு மீட்​புப் பணி​கள் நடை​பெற்​றன. இதில் படு​கா​யம் அடைந்த 27 பயணி​கள் மார்க்​காபுரம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்கப்​பட்​டனர். இந்​தப் பேருந்து புறப்​பட்​ட​போதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எர்​ர​கொண்ட பாளை​யத்​தில் பேருந்தை நிறுத்​தி, சுமார் ஒரு ​மணி நேரம் பழுது பார்த்​துள்​ளனர். பிறகு பேருந்து புறப்​பட்ட ஒரு மணி நேரத்​தில் விபத்து நேர்ந்​துள்​ளது. மார்க்​காபுரம் பேருந்து விபத்​தில் சிக்கிய ரமாதேவி தனது மகன் மனோகரை பேருந்​தில் இருந்து வெளியே தள்​ளி​விட்டு காப்​பாற்​றிய நிலை​யில், தான் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளார். இது தாய்​மைக்கு எடுத்​துக்​காட்டாக உள்​ளது.

ஆந்​திர அரசு நிதி​யுதவி: காயம் அடைந்​தவர்​களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு உத்தர​விட்​டார். இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்த அவர், தலா ரூ.5 லட்​சம் நிதி​யுதவி வழங்​கு​வ​தாக அறிவித்​தார்.

பிரதமர் மோடி இரங்​கல்: இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திர​வுபதி முர்​மு, பிரதமர் நரேந்​திர மோடி உள்​ளிட்ட தலை​வர்​கள் ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். பிரதமர் நிவாரண நிதி​யில் இருந்து இறந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.2 லட்​ச​மும் காயம் அடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here