மேற்கு ஆசிய நிலவரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை

0
27

மேற்கு ஆசிய நிலவரம் குறித்து ஆலோ​சிக்க நேற்று அனைத்​துக் கட்சி கூட்​டத்​துக்கு மத்​திய அரசு அழைப்பு விடுத்​தது.

பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில், வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர், பெட்​ரோலி​யத்​துறை அமைச்​சர் ஹர்​தீப் சிங் புரி உட்பட பலர் கலந்து கொண்​டனர். இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர். மேற்கு ஆசிய நில​வரம் குறித்து வெளி​யுறவுத்​துறை செய​லா​ளர் விக்​ரம் மிஸ்ரி விரி​வான விளக்​கம் அளித்​தார்.

அதைத் தொடர்ந்து மத்​திய அமைச்​சர்​கள் ஜெய்​சங்​கர், ஹர்​தீப் சிங் புரி ஆகியோர் பேசினர். எரிசக்தி பாதிப்பு குறித்​தும், கச்சா எண்​ணெய், எல்​பிஜி, உரங்​கள் ஆகியவை போதிய அளவில் இருப்பு உள்​ளது குறித்​தும் ஹர்​தீப் சிங் புரி விளக்​கி​னார். மேற்கு ஆசியா விவ​காரத்​தில் பாகிஸ்​தானின் பங்கு குறித்து எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் கேள்வி எழுப்​பினர். எதிர்​கட்சி பிர​தி​நி​தி​கள் எழுப்​பிய கேள்வி​கள் அனைத்​திற்​கும் மத்​திய அரசு திருப்​தி​கர​மாக பதில் அளித்த​தாக மத்​தி​ய அமைச்​சர்​ கிரண்​ ரிஜிஜு தெரிவித்தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here