கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சிஐடியு முன்னாள் எம்.பி பெல்லார்மின் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் குமரி மாவட்ட மீன்பிடி மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக தமிழகத்திற்குக் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.














