கேரளபுரத்தைச் சேர்ந்த அனீஸ் (29), அவரது மனைவி அர்ச்சனா (26) நேற்று (மார்ச் 23) பைக்கில் மண்டைக்காடு சென்றுவிட்டு திரும்பும்போது, நடுவூர் கரை சாலை பகுதியில் மூங்கில் கழை எதிர்பாராத விதமாக அர்ச்சனா மீது பட்டதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இது குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














