இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) அறிவித்துள்ளது. இரு நாடுகளிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது இருக்கும்.
மேலும் இந்தத் தொடர் மார்ச்சில் நிறைவடையும். வரும் ஆகஸ்டில் வங்க தேசத்துடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும், அக்டோபரில் தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் போட்டிகளிலும், டிசம்பர் முதல் 2027 ஜனவரி வரை நியூஸிலாந்துடன் 4 டெஸ்ட் போட்டிகளிலும், ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி மோதும்.













