அரசுப் பதவியில் 8,931 நாட்களைக் கடந்து பிரதமர் மோடி சாதனை!

0
22

 பிரதமர் மோடி நேற்று அரசுப் பதவியில் 8,931 நாட்​களைப் பூர்த்தி செய்​து, இந்​தி​யா​வில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவி​யில் இருந்​தவர் என்ற சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன்பு சிக்​கிம் மாநில முதல்​வ​ராக 24 ஆண்​டு​களுக்​கும் மேலாக (8,930 நாட்​கள்) பதவி வகித்த பவன் குமார் சாம்​லிங்​கின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்​துள்​ளார். பிரதமர் நரேந்திர மோடி அக்​டோபர் 7, 2001 முதல் மே 21, 2014 வரை தொடர்ந்து 13 ஆண்​டு​களுக்​கும் மேலாக குஜ​ராத் முதல்​வ​ராகப் பணி​யாற்​றி​னார். பின்​னர் 2014 மக்​கள​வைத் தேர்​தலில் போட்டியிட்டு வென்ற அவர், நாட்​டின் பிரதம​ராகப் பொறுப்பேற்றார். பின்​னர், 2019 மற்​றும் 2024 மக்​கள​வைத் தேர்தல்​களி​லும் வெற்றி பெற்று தற்​போது மூன்​றாவது முறையாகப் பிரதம​ராக நீடிக்​கிறார்.

பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பிரதமர் நரேந்​திர மோடி இப்​போது இந்​தி​யா​வில் மிக நீண்ட காலம் அரசுத் தலை​வ​ராக இருந்​தவர் என்ற பெருமை​யைப் பெறுகிறார். நாட்​டின் மீதும் மக்​கள் மீதும் கொண்டுள்ள தூய பக்​தியே பிரதமர் மோடியை வரையறுக்​கிறது. குஜ​ராத் முதல்​வ​ராக அவர் காட்​டிய உறுதி முதல், பிரதம​ராக அவர் வழங்​கும் அர்ப்​பணிப்​புள்ள தலைமை வரை, அவரது வாழ்க்கை ஒரு தொடர்ச்​சி​யான சேவைப் பயண​மாகும்” என கூறியுள்​ளார்.

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வெளி​யிட்​டுள்ள பதி​வில், “சேவை, கடின உழைப்பு மற்​றும் அசைக்க முடி​யாத அர்ப்பணிப்பில் உரு​வான மைல்​கல் இது. இன்று பிரதமர் நரேந்​திர மோடி, சிக்​கிம் முன்​னாள் முதல்​வர் பவன் குமார் சாம்​லிங்​கின் 8,930 நாட்​கள் சாதனையை முறியடித்​து, இந்​தி​யா​வின் நீண்​ட​கால அரசுத் தலை​வ​ராகி​யுள்​ளார்.

முதலில் குஜ​ராத் முதல்​வர், தற்போது பிரதமர் என 8,931 நாட்​கள் பொது​வாழ்​வில் அவர் இருப்பது, ‘தேசமே முதல்’ என்ற கொள்​கைக்​கும், நேர்​மை​யான செயல்​பாட்​டுக்​கும், அயராத மக்​கள் சேவைக்​கும் சான்​றாகும்” என கூறி​யுள்​ளார்.

இன்​ஸ்​டா​வில் 10 கோடி: இந்த மைல்​கல் சாதனையைத் தவிர, பிரதமர் மோடி​யின் உலகளா​விய டிஜிட்​டல் செல்​வாக்​கும் அதிகரித்து வரு​கிறது. இன்​ஸ்​டாகி​ராமில் 10 கோடி பின்​தொடர்பாளர்​களைக் கடந்த முதல் உலகத் தலை​வர் என்ற பெருமையை அவர் சமீபத்​தில் பெற்​றார். இது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் (4.3 கோடி) பின்​தொடர்​பாளர்​களை​விட 2 மடங்​கு அதி​கம்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here