குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் பூங்கோதை தீவிர ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக கடியப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சரல்விளை அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை அவர் நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது தேர்தல் பிரிவு அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.














