பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், கிளப்புகள், அரசின் நலத்துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை தொழில் தகராறு சட்டத்தின் கீழ் கொண்டு வந்து தொழிற்சாலை என்பதற்கான வரையறையை அளித்தது.
இதனிடையே இதை எதிர்த்து மத்திய அரசும், குஜராத், மத்திய பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநில அரசுகளும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளடக்கிய 46 மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு கடந்த 3 நாள்களாக விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.














