தமிழுக்கு மீண்​டும் வந்தது ஏன்? – மிலிந்த் சோமன் விளக்​கம்

0
27

விஜய் சேதுபதி நடித்​துள்ள ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடரை மணி​கண்​ட​னும் அஜித்​கு​மாரும் இயக்கியுள்​ளனர். இதில் இந்தி நடிகர் மிலிந்த் சோமன் முக்கிய வேடத்​தில் நடித்​துள்​ளார். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்​குப் பிறகு அவர் தமிழுக்கு வந்​துள்​ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு உள்பட பல்​வேறு மொழிகளில் ஜியோ ஹாட்​ஸ்​டாரில் மார்ச் 27-ம் தேதி வெளி​யாகிறது.

இத்​தொடரில் நடித்​தது பற்றி மிலிந்த் சோமன் கூறிய​தாவது: நான் முதல் தமிழ்ப்​படத்​தில் நடித்த அனுபவம் மகிழ்ச்​சி​யானது. பிறகு தமிழில் தொடர்ந்து நடித்​தேன். தெலுங்கு படங்​களி​லும் நடித்​துக் கொண்​டிருந்​தேன். ஒரு கட்​டத்​தில் ஒரே மாதிரி​யான கதா​பாத்​திரங்​களாகவே வந்​தன. ‘இனி அது போன்ற வேடங்​களை விரும்​ப​வில்​லை’ என்று கூறி​விட்​டேன்.

ஒரு கதா​பாத்​திரம் நேர்​மறை​யான அம்​சங்​களைக் கொண்​டிருந்​தால், நடிக்​கத் தயா​ராக இருக்​கிறேன். கதா​பாத்​திரத்​தின் நீளம் அல்​லது முக்​கி​யத்​து​வத்தை விட, அது முன்பு நான் நடிக்​காத கதா​பாத்​திர​மாக இருக்க வேண்​டும் என்​பதே முக்​கி​யம். அது தோட்​டக்​கார​ராகவோ, சமையல்​கார​ராகவோ, மாமா​வாகவோ, தாத்​தா​வாகவோ இருக்​கலாம். ஆனால் அது புதி​தாக இருக்க வேண்​டும்.

சுமார் 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு, அத்​தகைய மாறு​பட்ட கதா​பாத்​திரங்​கள் எனக்கு அமை​யத் தொடங்​கின. அந்த வரிசை​யில், ‘காட்​டான்’ வெப் தொடரும் தேடி வந்​தது. இதை ஏற்​றுக்​கொண்​டதற்​குப் பல காரணங்​கள் உண்​டு. முதலா​வ​தாக, இது ஒரு தமிழ்த் தயாரிப்​பு. 2-வது இதில் எனக்கு நேர்​மறை​யான கதா​பாத்​திரம்.

இந்​தக் கதா​பாத்​திரத் தின் தன்​மை​யும், அது சித்​தரிக்​கப்​பட்​டுள்ள வித​மும் சுவாரஸ்​ய​மாக அமைந்​திருந்​தன. மேலும், படக்​குழு​வினர் மிகச் சிறந்​தவர்​களாக இருந்​தனர். விஜய் சேதுபதி மிக​வும் இனிமை​யானவர். அவர் என்னை தனது குடும்​பத்​தினருக்கு அறி​முகப்​படுத்தி வைத்​தார். நாங்​கள் மனம் விட்​டுப் பேசினோம். அவர் ஒரு கணக்​காள​ராகப் பணி​யாற்​றிய​வர் என்ற தகவலை அப்​போது​தான் தெரிந்து கொண்​டேன்.

படப்​பிடிப்​புச் சூழலை மிக​வும் சவு​கரிய​மான​தாக மாற்​றியமைத்​தார். நாங்​கள் இணைந்து நடித்த ஒவ்​வொரு காட்​சி​யிலும், எந்​த​வித​மான மன அழுத்​தமோ அல்​லது இறுக்​கமோ இல்​லை. அந்த அனுபவம் மகிழ்ச்​சி​யாக​வும், இயல்​பாக​வும் அமைந்​திருந்​தது. நான் எப்​போதும் அத்​தகைய சூழலைத்​தான் விரும்​புவேன். இவ்​வாறு மிலிந்த் சோமன் கூறி​னார். இந்தி நடிக​ரான மிலிந்த் சோமன் தமிழில் ‘பச்​சைக்​கிளி முத்​துச்​சரம்’, ‘பை​யா’, ‘வித்​தகன்’, ‘அலெக்ஸ் பாண்​டியன்’ என சில படங்​களில் நடித்​துள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here