இஸ்ரேல் தாக்குதலால் 6 நிமிடத்தில் நொறுங்கிய லெபனானின் பெய்ரூட் நகர கட்டிடம்!

0
17

அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடி​யாக வளை​குடா நாடு​களில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை தளங்​கள், கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்​குதல் நடத்தி வருகின்​றன.

இதனைத் தொடர்ந்​து, ஈரானுக்கு ஆதர​வாக ஏமனில் உள்ள ஹவுதி​கள் மற்​றும் லெப​னானின் ஹிஸ்​புல்லா தீவிர​வாத அமைப்பு​கள் இஸ்​ரேலுக்கு எதி​ரான தாக்​குதலை மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து லெப​னான் மீது இஸ்​ரேல் நடத்தி வரும் தாக்​குதல்​களில் 900-க்​கும் அதி​க​மான நபர்​கள் உயிரிழந்​தனர்.

இந்​நிலை​யில் லெப​னான் தலைநகர் பெய்​ரூட்​டிலுள்ள கட்​டிடம் மீது இஸ்​ரேல் படை கள் தாக்​குதல் நடத்​தின. 6 விநாடிகளில் அங்கு கட்​டப்​பட்​டிருந்த அந்த பெரிய கட்​டிடம் தூள் தூளானது.

இது தொடர்பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வருகிறது. இதில் 12 பேர் உயி​ரிழந்​தனர் என்று இஸ்​ரேல் ராணுவம் அறி​வித்​துள்​ளது. மேலும், 41 பேர் காயமடைந்​துள்​ளனர் என்​றும் ராணுவம் தெரி​வித்​துள்​ளது.

பெய்​ரூட்​டின் மத்​திய, தெற்​குப் பகு​தி​களி​லும் இஸ்​ரேல் படைகள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக லெப​னானின் தேசிய செய்தி ஏஜென்சி (என்​என்ஏ) தெரி​வித்​துள்​ளது. மக்​கள் அதி​கம் உள்ள பகு​தி​யான ஜுகாக் அல்​-பிளாட் பகு​தி​யில் அமைக்​கப்​பட்​டிருந்த இந்த அடுக்குமாடி குடி​யிருப்பு இந்​தத் தாக்​குதலில் முற்​றி​லு​மாக சிதைந்​து​விட்​ட​தாக ராணுவம் தெரி​வித்​துள்ளது.

இதைப் போலவே சென்​டிரல் பஸ்டா மாவட்​டத்​தி​லுள்ள 2 அடுக்குமாடி குடி​யிருப்​பு​கள் மீதும் இஸ்​ரேல் படைகள் தாக்​குதல் நடத்​தின. இதில் அந்​தக்கட்​டிடங்​கள் சேதமடைந்​தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here