ஒடிசாவில் கொறடா உத்​தரவை மீறிய 3 காங். எம்எல்ஏக்கள் நீக்கம்

0
22

ஒடி​சா​வில் 4 மாநிலங்​களவை எம்பி பதவி​களுக்கு நேற்று முன்​தினம் தேர்​தல் நடை​பெற்​றது. அப்​போது பாஜகவை சேர்ந்த மன்​மோகன் சமல், சுஜித் குமார், திலீப் ரே ஆகியோர் வெற்றி பெற்​றனர்.

பிஜு ஜனதா தளத்​தில் சான்ட்​ரப்ட் மிஸ்ரா வெற்றி பெற்​றார். அந்த கட்​சி​யின் மற்​றொரு வேட்​பாளர் தத்​தேஸ்​வர் ஹோடா தோல்வி அடைந்​தார். மாநிலங்​கள​வைத் தேர்​தலில் பிஜு ஜனதா தளத்துக்கு காங்​கிரஸ் ஆதரவு அளித்​தது. காங்​கிரஸின் 14 எம்எல்ஏக்​களில் 3 பேர் அணி மாறி பாஜக வேட்​பாள​ருக்கு வாக்களித்​தனர்.

இதைத் தொடர்ந்து ஒடிசா மாநில காங்​கிரஸ் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மாநிலங்​கள​வைத் தேர்​தலில் கொறடா உத்தரவை மீறி சோபியா பிர்​டஷ், தசரத் காமங்​கோ, ரமேஷ் ஜெனா ஆகியோர் பாஜக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக வாக்களித்து உள்ளனர். இதன்​ காரண​மாக 3 எம்​எல்​ஏக்​களும் கட்சி​யில் இருந்து நீக்கப்​படு​கின்​றனர். கட்சி விதி​களின்​படி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட 3 எம்​எல்​ஏ-க்​களை​யும் தகுதி நீக்​கம் செய்​யும்​படி ஒடிசா சட்​டப்​பேர​வைத் தலை​வருக்கு காங்​கிரஸ் சார்​பில் கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here