மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று பேசியதாவது: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஏழைகள், நடுத்தரக் குடும்பங்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகளை கடுமையாகப் பாதித்துள்ளது.
பிராந்திய பதற்றம் பற்றி தெரிந்திருந்தும் அரசு ஏன் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை ? பொதுமக்களின் கவலையைப் போக்க எதிர்க்கட்சிகளை ஏன் ஒருங்கிணைக்கவில்லை ? எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைத் தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.














