குழித்துறை அருகே கோழிக்கடை நடத்தி வரும் ஜெஸ்டின் (40) என்பவர், மது குடித்துவிட்டு வேலைக்கு வந்த ரஞ்சித் என்ற வாலிபரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், ஜெஸ்டினை வெட்டி காயப்படுத்தியுள்ளார். பலத்த காயமடைந்த ஜெஸ்டின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டில் பதுங்கியிருந்த ரஞ்சித்தை கைது செய்தனர்.














