பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதில் முக்கியமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ரயில்வே உயர் அதிகாரிகள், காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.














