இயக்​குநர் தக்​காளி சீனிவாசன் கால​மா​னார்

0
22

இயக்​குநரும், தயாரிப்​பாள​ரு​மான தக்​காளி சீனி​வாசன் (73) உடல் நலக்​குறை​வால் பெங்​களூரூ​வில் கால​மா​னார். 1980-களில் இயக்​குநர், நடிகர், தயாரிப்​பாளர், இசையமைப்பாளர் என வலம் வந்​தவர், தக்​காளி சீனிவாசன்.

இவர்​கள் வருங்​காலத் தூண்​கள், மனசுக்​குள் மத்​தாப்​பு, நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற படங்​களைத் தயாரித்​துள்​ளார். ஜென்ம நட்​சத்​திரம், விட்​னஸ், அசோக வனம், அடுத்​தது ஆகிய படங்​களை​யும் இயக்​கி​யுள்ள இவர், நாளைய மனிதன், அதிசய மனிதன், ஜென்ம நட்​சத்​திரம், ஃபிட்​னஸ் என சில படங்​களுக்கு இசையமைத்​தும் உள்​ளார்.

கமல்​ஹாசனின் சூரசம்​ஹாரம் உள்​ளிட்ட சில படங்களிலும் நடித்​துள்ள தக்​காளி சீனி​வாசன் பெங்களூரில் வசித்து வந்​தார். உடல் நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்​டிருந்த அவர், அதற்​காக சிகிச்​சைப் பெற்று வந்​தார். இந்​நிலை​யில் செவ்​வாய்க்​கிழமை கால​மா​னார். அவர் மறைவுக்கு திரை​யுல​கினர் இரங்​கல் தெரி​வித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here