இந்தியாவின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்யத் தயார்: கனடா பிரதமர் மார்க் கார்னி தகவல்

0
17

இந்​தி​யா​வின் அதி​கரித்து வரும் எல்​என்ஜி எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்​யத் தயா​ராக இருப்​ப​தாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரி​வித்​துள்​ளார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் கூறியிருப்​ப​தாவது: வரும் 2040-ம் ஆண்​டுக்​குள் இந்​தி​யா​வின் எரிவாயு தேவை இரு மடங்​காக அதி​கரிக்​கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிசக்தி வல்​லரசு என்ற முறை​யில் இந்தியா​வின் அதி​கரித்து வரும் எரி​வாயு தேவையை பூர்த்தி செய்ய கனடா தயா​ராக உள்​ளது. உலகின் மிகக் குறைந்த கார்பன் வெளி​யேற்​றம் கொண்ட மற்​றும் நம்​பக​மான முறை​யில் உற்​பத்தி செய்​யப்​படும் திரவ இயற்கை எரி​வா​யுவை (எல்​என்​ஜி) வழங்க தயா​ராக உள்​ளோம்.

ஆசியா மற்​றும் ஐரோப்பா முழு​வதும் வெப்​ப​மாக்​கல், மின்​சா​ரம் மற்​றும் தொழில்​துறை பயன்​பாட்​டுக்கு இது பரவலாகப் பயன்படுத்​தப்​படு​கிறது. மத்​திய கிழக்கு நாடு​களில் நில​வும் போர்ச்சூழல், கத்​தா​ரில் இருந்து வரும் எரி​வாயு விநி​யோகத்​தைப் பாதித்துள்​ள​தால், அதன் விலை உயர்ந்​திருப்​பதுடன், விநி​யோகத்​தி​லும் மாற்​றங்​கள் ஏற்​பட்​டுள்​ளன.

வரும் 2030-ம் ஆண்டு இறு​திக்​குள் தனது புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தித் திறனை 500 ஜிகா​வாட்​டாக அதி​கரிக்​க​வும், தங்​கள் நாட்​டின் முதன்மை எரிசக்தி கலவை​யில் எல்​என்​ஜி-​யின் பங்கை கிட்​டத்​தட்ட இரு​மடங்​காக உயர்த்​த​வும் இந்​தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு கனடா உறு​துணை​யாக இருக்​கும்.

உற்​பத்​தி, தூய்​மை​யான தொழில்​நுட்​பம் மற்​றும் அணுசக்தி திட்டங்​களுக்​காக இந்​தியா முக்​கிய​மான தாதுப் பொருட்​களைத் தேடும் வேளை​யில், கனடா​வின் வளங்​கள் மற்​றும் முன்​னணி நிறுவனங்​கள் ஒரு சிறந்த கூட்​டாளி​யாக அமை​யும். உலகில் உள்ள சுரங்க நிறு​வனங்​களில் 40 சதவீதம் கனடா​வில் பட்டியலிடப்​பட்​டுள்​ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கச்சா எண்​ணெய், எல்​பிஜி, எல்​என்ஜி அல்​லது யுரேனி​யம் என கனடா எதை வழங்​கி​னாலும் வாங்க இந்​தியா தயா​ராக இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளி​யானது. அதே​நேரம், வேகமாக வளர்ந்து வரும் இந்​தி​யப் பொருளா​தா​ரத்​தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஒப்​புதல் நடை​முறை​களை கனடா எளி​தாக்க வேண்​டும் என்​றும் இந்​தியா வலி​யுறுத்​தி​யது குறிப்பிடத்​தக்​கது.

ஈரான் – இஸ்​ரேல் போர், மத்​திய கிழக்கு நாடு​களின் நிலை​மை, ஹார்​முஸ் ஜலசந்தி மூடல் மற்​றும் எரிசக்தி விலை உயர்வு குறித்து பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரானுடன் ஆலோசித்த பிறகு, கார்னி இந்த வீடியோவைப் பகிர்ந்​துள்​ளார். முன்​ன​தாக திங்​கள்​கிழமை அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​புட​னும்​ அவர்​ இது குறித்​து ​வி​வா​தித்​திருந்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here