கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் இறுதி நாளான நேற்று நள்ளிரவில் ஒடுக்கு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை 13 மண்பானைகளில் மூடி, தலையில் சுமந்து அம்மன் சன்னதிக்கு கொண்டு வந்து பூஜைகள் நடத்தப்பட்டன. நள்ளிரவு 12:30 முதல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையுடன் திருக்கொடி இறக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.














