இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 21,466 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மார்த்தாண்டம் பகுதியில் 67 மையங்களும், நாகர்கோவில் பகுதியில் 50 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்காக 5 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 9 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














