கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 11 பெண்கள் உட்பட 90 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆயுதப்படை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். வீரர்கள் நேற்று முதல் சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீரர்கள் குமரி மாவட்டம் வர உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.














