மேற்கு ஆசிய நிலவரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

0
18

மேற்கு ஆசிய நில​வரம் குறித்து விவா​திக்க வலியுறுத்தி எதிர்க்​கட்​சிகள் நேற்று அமளி​யில் ஈடு​பட்​ட​தால் மக்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

​நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்​கியது. மக்​களவை நேற்​று, நண்​பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. இதையடுத்து மேற்​காசிய நில​வரம் குறித்து வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் தனது உரையை வாசிக்கத் தொடங்​கி​னார்.

அப்​போது இந்த விவ​காரம் குறித்து முழு அளவில் விவாதம் நடத்த வேண்​டும் என காங்​கிரஸ், திமுக, சமாஜ்​வாதி உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகளின் உறுப்​பினர்​கள் முழக்​கமிட்​டனர்.

அப்​போது அவையை நடத்​திய பாஜக மூத்த உறுப்​பினர் ஜெக​தாம்​பிகா பால், “பதாகைகள் மூலம் எதிர்க்​கட்​சிகள் எழுப்​பிய கேள்விகளுக்கு அரசு விரி​வாக பதில் அளிக்​கும்” என்​றார். சபாநாயகர் பதவியி​லிருந்து ஓம் பிர்​லாவை நீக்​கு​வதற்​கான தீர்மானம் ஏற்​கெனவே நிகழ்ச்சி நிரலில் உள்ள நிலை​யில் எப்​படி ஒரே நாளில் 2 பிரச்​சினை​களை விவா​திக்க முடி​யும்?” என அவர் வியப்பு தெரி​வித்​தார்.

“அமைச்​சரின் பதிலில் திருப்தி அடை​யா​விட்​டால் இந்​தப் பிரச்சினை குறித்து விவாதம் கோரி அலு​வல் ஆய்​வுக் குழுவை நீங்​கள் அணுகலாம்” என்​றும் அவர் கூறி​னார்.

ஜெய்​சங்​கர் தனது உரையை முடித்த பிறகு, “அவை​யின் நெறிமுறை​களை எதிர்க்​கட்​சிகள் பின்​பற்​ற​வில்​லை” என அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்​றம் சாட்​டி​னார்.

அமைதி காக்​கு​மாறு அவைத் தலை​வர் விடுத்த கோரிக்​கையை ஏற்​காமல் எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் தொடர்ந்து முழக்​கமிட்டு அமளி​யில் ஈடு​பட்​ட​தால் பிற்​பகல் 3 மணி வரை அவை ஒத்திவைக்​கப்​பட்​டது. பிறகு மீண்டும் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப் பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here