விருதுநகர் மாவட்டம் ராஜன், நித்திரவிளையில் உள்ள தனியார் மதுக்கடையில் மேலாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் ரெதீஷ் ஆகியோர் ராஜனின் வீட்டிற்குச் சென்று, வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக ராஜனின் மனைவி ஜோதி அளித்த புகாரின் பேரில், நித்திரவிளை போலீசார் அஜித்குமாரை கைது செய்து, ரெதீஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.














