நித்திரவிளை அருகே நடைக்கவு பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி அபிஷா (24) என்பவரை, பக்கத்து வீட்டில் வசிக்கும் மணி (50) என்பவர் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அபிஷா நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்தனர்.














