மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம் வட்டார குழு சார்பில், ஈரான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை கண்டித்து மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் மோகன் குமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். பேராசிரியர் சனல் குமார் சிறப்புரையாற்றினார். வட்டார குழு உறுப்பினர் சர்தார் ஷா கண்டன உரையாற்றினார். கூட்டத்தில் லதா, ராதாகிருஷ்ணன் தாஸ், ஜினோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.














