கிள்ளியூர், நல்லூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி கிரேசிலின் ஷீனா கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரைத் தேடி வந்த நிலையில், அவரது தந்தைக்கு ஒரு மர்ம எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. பேசிய நபர், ‘உங்கள் மகள் என்னுடன் நலமாக இருக்கிறார்’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை சாம் பிரைட் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














