குவைத்தில் தவறுதலாக 3 அமெரிக்க விமானங்களை வீழ்த்தியது ‘டாப் கன் 2′ பட புகழ் போர் விமானம்

0
15

வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறி​வைத்து கடந்த செவ்​வாய்க்​ கிழமை ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது. அப்​போது குவைத் வான்​பரப்​பில் 3 அமெரிக்க எப்​-15 இ ஸ்டிரைக் ஈகிள்ஸ் விமானங்​கள் சுட்டு வீழ்த்தப்​பட்​டன.

இவை குவைத்​தின் நிலத்​தில் இருந்து ஏவப்​படும் ஏவு​கணை​களால் தவறு​தலாக சுட்டு வீழ்த்​தப்​பட்​ட​தாக ஆரம்​பத்​தில் கூறப்​பட்​டது. ‘நட்பு நாடு​களுக்கு இடையி​லான சம்​பவம்’ என கருதப்​படும் இது குறித்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில், அமெரிக்க தயாரிப்​பான எப்​/ஏ-18 ஹார்​னெட் போர் விமானம் மூல​மாகவே அந்த 3 விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்டன என்று இப்​போது தெரிய​வந்​துள்​ளது.

எப்​-18 ஹார்​னெட் ஒரு பல்​நோக்கு போர் விமான​மாகும். பெரும்பாலும் அமெரிக்க விமானம் தாங்கி கப்​பல்​களின் தளங்களில் இருந்து இவை இயக்​கப்​படு​கின்​றன. முதல் தலைமுறை எப்​-18 முதல் தற்​போது வரை பல்​வேறு மேம்​பட்ட வடிவங்​களில் இவை பல பணி​களுக்​காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ள எப்/ஏ என்​பது வான்​வழித் தாக்​குதல் (Fighter) மற்​றும் தரைவழித் தாக்​குதல் (Attack) ஆகிய இரண்​டை​யும் ஒரே நேரத்​தில் செய்​யும் திறன் கொண்​டது என்பதைக் குறிக்​கிறது.

எப்​-18 ஹார்​னெட் விமானங்​கள், 1986-ல் வெளி​யான ‘டாப் கன்’ திரைப்​படத்​தில் புகழ்​பெற்ற அமெரிக்க கடற்​படை​யின் எப்​-14 டாம்​கேட் விமானங்​களைப் பின்​தொடர்ந்து வந்​தவை ஆகும். 2022ல் வெளி​யான ‘டாப் கன்​-2′ திரைப் ​படத்​தில் எப்​-18 சூப்​பர் ஹார்​னெட்ஸ் இடம் பெற்​றிருந்​தன.

தற்​செய​லாக, முதல் பாகத்தில் முக்​கிய பங்கு வகித்த விமானங்​களுக்கு மாற்​றாக வந்த அதே விமானங்​கள் ​தான் இரண்​டாம் பாகத்​தி​லும் பயன்படுத்​தப்​பட்​டன. போயிங் நிறு​வனம், எப்​/ஏ-18 சூப்​பர் ஹார்னெட் வி​மானத்​தை, வி​மானம் தாங்கி கப்​பல்​ பிரிவு​களின்​ முது​கெலும்​பாகக்​ கருதுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here