உலக பீச் வாலிபால் போட்டி இன்று தொடக்கம்

0
14

உலக பீச் வாலிபால் போட்டி ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் இன்று முதல் ​(​மார்ச் 4) வரும் 8-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.

ஒடிசா மாநிலத்​தி​லுள்ள கேஐஐடி பல்​கலைக்​கழகம் இந்​தப் போட்​டிக்கு ஏற்​பாடு செய்​துள்​ளது. ஆடவர், மகளிர் என இரு பிரி​விலும் போட்​டிகள் நடை​பெறவுள்​ளன. இரு பிரிவிலும் சேர்த்து 52 நாடு​களைச் சேர்ந்த 82 அணி​கள் இந்தப் போட்​டி​யில் பங்​கேற்​க​வுள்​ளன.

லீக் மற்​றும் நாக்​-அவுட் அடிப்​படை​யில் போட்​டிகள் நடைபெறும். கேஐஐடி பல்​கலைக்​கழக வளாகத்​தில் உள்ள டூட்டி சந்த் தடகள மைதானத்​தில் போட்​டிகள் சர்​வ​தேச தரத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள பீச் வாலி​பால் அரங்​கில் நடை​பெறவுள்​ளன.

போட்டி தொடக்க விழா​வில் சர்​வ​தேச வாலி​பால் சம்​மேளனத் தலை​வர் பேபியோ அஸிவேடோ, கேஐஐடி பல்​கலைக்​கழக வேந்​தர் அச்​சுதா சமந்தா உள்​ளிட்​டோர் பங்​கேற்​க​வுள்​ளனர். அடுத்த 3 ஆண்​டு​கள் வரை இந்​தப் போட்டி புவனேஷ்வரிலேயே நடை​பெறவுள்​ளது என்று பேபியோ அஸிவேடோ தெரி​வித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here