தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் இறந்துள்ளார். அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய ஜட்செர்லா அரசு மருத்துவமனையின் பிணவறையில் கொண்டு சென்று வைக்கப்பட்டது.
இந்நிலையில், காலையில் சென்று பார்த்தபோது, அந்த இளைஞரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறி இருந்ததை அறிந்த மருத்துவர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த இளைஞரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தெலங்கானா அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது. இது தொடர்பாக 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.














