அருமனை, கிராங்கோணம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான பெயிண்டர் மதுசிவசங்கரப் பிள்ளை கடந்த 2 நாட்களாக காணாமல் போயிருந்தார். நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அருமனை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














