காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம்: இணைய சேவை துண்டிப்பு

0
20

ஈ​ரான் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி கொல்லப்​பட்​டதைக் கண்​டித்து நேற்று ஜம்மு காஷ்மீர் முழு​வதும் போராட்​டங்​கள் வெடித்​துள்​ளன.

ஸ்ரீநகரில் உள்ள ஐக்​கிய நாடு​களின் ராணுவப் பார்​வை​யாளர்​கள் குழு​வின் தலை​மையகம் முன் கருப்பு கொடி ஏந்​தி​யபடி திரண்ட மக்​கள், அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் அதன் நட்பு நாடு​களுக்கு எதி​ராக முழக்​கங்​களை எழுப்​பினர். இது​போல பண்​டி​போரா பகுதி​யிலும் போராட்​டம் நடைபெற்றது.

இதனிடையே வேலை நிறுத்த போராட்​டத்​துக்கு நாளை அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, ஸ்ரீநகரில் செல்​போன் இணைய சேவை துண்​டிக்​கப்​பட்​டுள்​ளது. பள்​ளி​கள் மற்​றும் கல்லூரி​களுக்கு 2 நாட்​கள் விடு​முறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், ஜம்மு காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா அமைதி காக்​கு​மாறு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

மக்​கள் ஜனநாயகக் கட்​சித் தலை​வரும் முன்​னாள் முதல்​வரு​மான மெகபூபா முப்தி வெளி​யிட்ட அறிக்​கை​யில், “காமேனியைக் கொன்​றது குறித்து இஸ்​ரேலும் அமெரிக்கா​வும் தற்​பெருமை பேசுகின்​றன. மனசாட்​சி​யை​ விட வசதி​யை​யும் சுயநலத்​தை​யும் தேர்ந்​தெடுத்த முஸ்​லிம் நாடு​களின் வெளிப்​படை​யான மற்​றும் மறை​முக​மான ஆதர​வு மிக​வும்​ அவமானகர​மானது” என கூறியுள்ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here