கருங்கல்: ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த 6 பேர் கும்பல்

0
25


நேற்று முன்தினம் மணலி பகுதியைச் சேர்ந்த நெசில் என்பவர், திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜான் ஏசுதாஸை (42) சவாரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும், நெசில் மேலும் 5 பேருடன் சேர்ந்து ஜான் ஏசுதாஸை தாக்கி, அவரிடமிருந்து ரூ. 25,000 மதிப்புள்ள செல்போன் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 21,500 ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கருங்கல் போலீசார் நெசில் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here