வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28, சென்னை 28-2 ஆகிய திரைப்படங்களை இணைத் தயாரிப்பு செய்த கேஜே சரவணா, தனது தந்த்ரா பிலிம்ஸ் சார்பில், சுவாமி ஐயப்பனின் மகிமையை சொல்லும் 2 திரைப்படங்களைத் தயாரிக்கிறார்.
இந்தப் படங்களின் தலைப்புகளான ‘தத் த்வம் அஸி’, ‘ஆர்ய கேரள வர்மன்’ ஆகியவற்றை வெங்கட் பிரபு வெளியிட்டார். ஐயப்ப பக்தரின் வாழ்க்கை, அவரது நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக பயணத்தை மையமாகக் கொண்டு ஆன்மீக ஆக் ஷன் படமாக, ‘தத்த்வம் அஸி’ உருவாகிறது.
இதை, ‘மாளிகாப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்குகிறார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ‘ஆர்ய கேரள வர்மன்’ திரைப்படம் இதுவரை அதிகம் பேசப்படாத சுவாமி ஐயப்பனின் சுயசரிதை கதையை கொண்டது.
16-ம் நூற்றாண்டின் வரலாற்றுப் பின்னணியில், அவரது வீரத்தையும் ஆன்மீகத் தத்துவத்தையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. இதை ஜேகே சரவணா, ஆதித்யா தங்கிராலா இணைந்து இயக்குகின்றனர். ஆன்மீகம், வீரம், பண்பாடு ஆகியவை இணையும் சக்திவாய்ந்த காட்சிப் படைப்பாக இது உருவாக இருக்கிறது. இந்த 2 படங்களும் பான் இந்தியா முறையில் பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கின்றன.














