‘த கேரளா ஸ்டோரி 2’ ரிலீஸ் தடை நீக்கம்!

0
31

கமக்யா நாராயண் சிங் இயக்​கத்​தில் விபுல் ஷா தயாரித்துள்ள படம், ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’. இப்படம் நேற்று (பிப்​.27) வெளி​யா​வ​தாக இருந்தது. இந்நிலை​யில் இந்​தப் படத்​தைத் தடை செய்​யக் கோரி தேவ் நம்​பூ​திரி உள்​ளிட்​டோர் சார்​பில் கேரள உயர் நீதிமன்றத்​தில் மனுக்​கள் தாக்​கல்செய்​யப்​பட்​டன.

கேரளாவை வகுப்​பு​வாத கண்​ணோட்​டத்​தில் காட்டுவதாகவும், இது சட்​டம், ஒழுங்கை பாதிக்​கக் கூடும் என்​றும் மனு​வில் குறிப்​பிடப்​பட்டு இருந்​தது. இவ்​வழக்​கின் வாதங்​களைக் கேட்ட நீதிப​தி, “கேரளா ஸ்டோரி 2 படத்துக்கு எதி​ரான நிலு​வை​யில் உள்ள மனுக்​கள் இறுதியாக விசா​ரிக்​கப் பட்டு முடிவு செய்​யும் வரை, படத்தை வெளி​யிட வேண்​டாம்.

2 வாரங்​களுக்கு படத்தை திரை​யிட இடைக்​காலத் தடை விதிக்​கப் படு​கிறது. மேலும் சமூக நல்​லிணக்​கத்தை சீர்குலைக்​காமல் இருப்​பதை உறுதி செய்​வதற்​கான வழிகாட்​டு​தல்​களை மத்​திய திரைப்பட சான்​றிதழ் வாரியம் பின்​பற்​ற​வில்​லை” என்​றும் தெரி​வித்​தார்.

தனி​நீ​திப​தி​யின் இந்த உத்​தர​வுக்கு எதி​ராக தயாரிப்​பாளர் விபுல் ஷா தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை உயர்​ நீ​தி​மன்ற நீதிப​தி​கள் சுஸ்​ருத் அரவிந்த் தர்​மா​தி​காரி மற்​றும் பி.​வி.​பால​கிருஷ்ணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு வியாழக்​கிழமை மாலை பரிசீலித்​தது.

படத்​தின் வெளி​யீட்டை நிறுத்​து​வது தயாரிப்​பாள​ருக்​குப் பொருளா​தார ரீதி​யாகப் பாதிப்பை ஏற்​படுத்​தும் என்​றும், படம் எந்த மதத்​தையோ அல்​லது கேரளாவையோ மோச​மாகச் சித்​தரிக்​க​வில்லை என்​றும் மேல்​முறை​யீட்​டில் வாதிடப்​பட்​டது.

அப்​போது இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் அமர்வு திரைப்​படத்​தின் வெளி​யீடு தொடர்​பான தனி​நீதிபதி​யின் தீர்ப்பை ஒத்​தி​வைத்​தது. இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்​கிய நீதிப​தி​கள் அமர்​வு, தனி நீதிபதி விதித்த தடையை நீக்​கி, அப்​படத்தை வெளியிட அனுமதி வழங்​கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here