தெலங்கானாவில் 2 ஆண்டில் 591 மாவோயிஸ்ட்கள் சரண்: அமைதியாக சாதித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி

0
23

தெலங்​கானா மற்​றும் ஆந்​தி​ரா​வில் கடந்த 2 ஆண்​டு​களில் 591 மாவோ​யிஸ்ட்​கள் சரண் அடைந்​த​தில் பெண் ஐபிஎஸ் அதி​காரி சுமதி முக்​கிய பங்​காற்​றி​யுள்​ளார்.

மாவோ​யிஸ்ட்​களை ஒழிக்க மத்​திய அரசு கெடு விதித்து தீவிர நடவடிக்கை எடுத்து வரு​கிறது. சரணடை​யும் தீவிர​வா​தி​களுக்கு மறு​வாழ்வு திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. அதன்படி தெலங்​கா​னா​வில் சிறப்பு உளவுப் பிரிவு ஐ.ஜி சுமதி, மாவோ​யிஸ்ட் கமாண்​டர்​கள் மற்​றும் உறுப்​பினர்​களிடம் தற்​போதுள்ள நிலை​மையை பக்​கு​வ​மாக எடுத்​துக் கூறி அவர்​கள் சரணடைந்து இயல்பு வாழ்க்​கைக்கு திரும்​பும்படி அறி​வுரை கூறி​னார். இவரது தொலைநோக்கு மற்​றும் பேச்​சு​வார்த்தை மாவோ​யிஸ்ட்​களை சரணடைய சம்​ம​திக்க வைத்​தது.

சும​தி​யின் தொடர் முயற்​சி​யின் காரண​மாக, கடந்த 2 ஆண்​டு​களில் மாவோ​யிஸ்ட் கமாண்​டர்​கள் உட்பட 591 மாவோ​யிஸ்ட்​கள் சரணடைந்துள்ளனர்.

மாவோ​யிஸ்ட் அமைப்​பின் கமாண்​ட​ராக இருந்த திப்​பிரி திருப்​பதி என்ற தேவுஜிக்கு போலீ​ஸாரிடம் சரணடை​யும் திட்​டம் எது​வும் இல்​லை. அவரிடம் பேச்​சு​வார்த்தை நடத்தி சரணடைய சம்​ம​திக்க வைத்​தார் ஐ.ஜி.சும​தி. இதையடுத்து தேவுஜி மற்​றும் அவரது கூட்​டாளி​கள் மால்லா ராஜி ரெட்டி மற்​றும் இரண்டு மூத்த உறுப்​பினர்​கள் கடந்த செவ்​வாய்க்கிழமை ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு சரணடைந்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here