குலசேகரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (50) என்பவர், கடந்த 22.8.2017 அன்று பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரானபோது, நீதிமன்ற ஊழியர்களை அவதூறாகப் பேசி, கையெழுத்து நோட்டை வீசி, நீதிமன்ற முத்தரையையும் உடைத்து எறிந்துவிட்டு ஓடினார். தக்கலை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிபதி பரமசிவதாஸ், மணிகண்டனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.














