‘த கேரளா ஸ்டோரி 2’ படத்துக்கு 2 வார தடை விதித்த ஐகோர்ட் கூறியது என்ன?

0
18

த கேரளா ஸ்டோரி 2 படத்​துக்கு 2 வார தடை விதித்து மாநில உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2023-ல் வெளி​யான ‘த கேரளா ஸ்டோரி’ திரைப்​படம் கேரளா மட்​டுமின்றி நாடு முழு​வதும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. அதன் தொடர்ச்​சி​யாக ‘த கேரளா ஸ்டோரி 2′ தயாரிக்​கப்​பட்டு இன்று (வெள்​ளிக்​கிழமை) வெளி​யாக இருந்​தது.

இந்​நிலை​யில் இந்த படத்தை தடை செய்ய கோரி ஸ்ரீதேவ் நம்​பூ​திரி உள்​ளிட்​டோர் சார்​பில் கேரள உயர் நீதி​மன்​றத்​தில் மனுக்​கள் தாக்கல் செய்யப்பட்​டன.

இந்த படத்​தில் கேரளாவை வகுப்புவாத கண்​ணோட்​டத்​தில் காட்டுவ​தாக​வும், இது சட்​டம், ஒழுங்கை பாதிக்​கக் ​கூடும் என்​றும் மனு​வில் குறிப்​பிடப்​பட்டு இருந்​தது.

இது தொடர்​பாக உயர் நீதிமன்​றத்​தில் நேற்று மூத்த வழக்​கறிஞர் ஸ்ரீகு​மார் ஆஜராகி, படம் வெள்​ளிக்​ கிழமை (இன்​று) திரையரங்குகளில் வெளி​யாகும் என்​றும், வெளி​நாட்டு விநி​யோக உரிமை​கள் ஏற்​கெனவே விற்​று​விட்​ட​தாக​வும் நீதிப​தி​யிடம் தெரிவித்​தார்.

இதனைக் கேட்ட நீதிப​தி, அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்பதாக​வும், இந்த வாதங்​கள் முடி​யும் வரை திரைப்​படம் வெளியிடு​வதை ஒத்​திவைக்​கலாம் என்​றும் அப்​போது குறிப்பிட்டார்.

அப்​போது வழக்​கறிஞர் ஸ்ரீ கு​மார் கூறும்​போது, “திரைப்படம் தொடர்​பான 2 நிமிட டீசரை மட்​டும் வைத்து அதற்கு தடை வழங்குவது கூடாது. இந்​தத் திரைப்​படம் அனைத்து சட்​டத் தேவைகளை​யும் பூர்த்தி செய்து உள்​ளது.

மேலும், படத்​துக்கு மத்திய திரைப்பட வாரிய​மும் சான்றளித்துள்ளது. அதன் பின்னரும், உயர் நீதி​மன்​றம் அதை நிறுத்​தக் ​கூ​டாது” என்று அவர் வாதிட்​டார்.

வாதங்​களைக் கேட்ட நீதிப​தி, “த கேரளா ஸ்டோரி 2 படத்​துக்கு எதிரான நிலு​வை​யில் உள்ள மனுக்​கள் இறு​தி​யாக விசாரிக்கப்பட்டு முடிவு செய்​யும் வரை படத்தை வெளி​யிட வேண்டாம்.

2 வாரங்​களுக்கு படத்தை திரை​யிட இடைக்​காலத் தடை விதிக்கப்படு​கிறது. மேலும் சமூக நல்​லிணக்​கத்தை சீர்குலைக்காமல் இருப்​பதை உறுதி செய்​வதற்​கான வழிகாட்டுதல்களை மத்​திய திரைப்பட சான்​றிதழ் வாரி​யம்​ பின்பற்​ற​வில்​லை” என்​றும்​ தெரி​வித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here