‘ஜமா’ பாரி இளவழகன் இயக்கி, நடிக்கும் படத்துக்கு ‘அன்பே டயானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடித்துள்ளார். ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். நியோ கேசில் கிரியேஷ்ன்ஸின் சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முதல் தோற்றத்தை இசை அமைப்பாளர் அனிருத் வெளியிட்டார்.














