சூப்​பர் 8-ல் நியூஸி. உடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது இலங்கைV

0
14

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் குரூப் 2-ல் இடம் பெற்​றுள்ள இலங்கை – நியூஸிலாந்து அணி​கள் இன்று இரவு 7 மணிக்கு கொழும்​பில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்தில் மோதுகின்​றன.

இலங்கை அணி அரை இறு​திக்கு முன்​னேற வேண்டுமானால் இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது. தசன் ஷனகா தலைமயி​லான இலங்கை அணி சூப்​பர் 8 சுற்​றில் தனது முதல் ஆட்​டத்​தில் இங்​கிலாந்து அணி​யிடம் 51 ரன்கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது.

அந்த ஆட்​டத்​தில் 147 ரன்​கள் இலக்கை துரத்த முடி​யாமல் இலங்கை அணி 95 ரன்​களுக்கு சுருண்​டிருந்​தது. மேலும் இலங்கை அணி​யின் பேட்​ஸ்​மேன்​களின் சில ஷாட் தேர்வுகளும் மோச​மாக அமைந்​திருந்​தன.

சொந்த மைதானத்​தில் ஆடு​களத்​தின் தன்​மைக்கு ஏற்றவாறு அவர்​கள், தங்​களது ஆட்ட வியூ​கத்தை மாற்​றிக் கொள்​ளாததன் விளை​வாக தோல்​வியை சந்​தித்​தனர். ஏனெனில் இந்​தி​யா​வில் உள்ள ஆடு​களங்​களை​விட இலங்கை​யில் உள்ள ஆடு​களங்​களில் ரன்​கள் குவிப்​பது கடின​மாக உள்​ளது. மேலும் ஆடு​களத்​தின் எல்லைக்கோடுகள் பெரியது என்​ப​தால் இங்கு சிக்​ஸர்​கள் விளாசுவதும் எளி​தானது இல்​லை.

இதனால் கடந்த ஆட்​டத்​தில் செய்த தவறுகளில் இருந்து இலங்கை அணி வீரர்​கள் பாடம் கற்​றுக்​கொண்டு வெற்றி பாதைக்கு திரும்​பவதற்கு முயற்சி செய்​யக்​கூடும். பேட்டிங்​கில் அந்த அணி​யில் பதும் நிசங்கா சிறந்த பார்​மில் உள்​ளார். பந்​து​வீச்​சில் இடதுகை சுழற்​பந்து வீச்சாளரான துனித் வெல்​லாலகே சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார்.

அதேவேளை​யில் தில்​ஷான் மதுசங்கா உள்​ளிட்ட வேகப்​பந்து வீச்​சாளர்​களும் நெருக்​கடி கொடுப்​பவர்​களாக திகழ்​கின்​றனர். மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூஸிலாந்து அணி சூப்​பர் 8 சுற்​றில் பாகிஸ்​தான் அணியுடன் மோத இருந்த ஆட்​டம் மழை காரண​மாக ரத்தாகி​யிருந்​தது.

பேட்​டிங்​கில் தொடக்க வீரர்​களான பின் ஆலன், டிம் ஷெய்பர்ட் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடும் திறன் கொண்​ட​வர்​கள். ரச்​சின் ரவீந்​தி​ரா, கடைசி லீக் ஆட்​டத்​தில் கனடாவுக்கு எதி​ராக அரை சதம் அடித்து பார்​முக்கு திரும்​பி​யிருந்​தார். கிளென் பிலிப்​ஸ், மிட்​செல் சாண்ட்​னர், மார்க் சாப்​மேன் ஆகியோ​ரும் அதிரடி​யில் மிரட்​டக்​கூடிய​வர்​கள்.

சுழலில் மிட்​செல் சாண்ட்​னர், இஷ்சோ​தி, கிளென் பிலிப்ஸ் பலம் சேர்க்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் லாக்கு பெர்குசன், ஜேக்​கப் டஃபி, மேட் ஹென்றி உள்​ளிட்​டோர் இலங்கை பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். இன்​றைய ஆட்​டத்​தில் இலங்கை அணி தோல்​வி அடைய நேரிட்​​டால்​ அரை இறு​திக்​கு முன்​னேறு​வதற்​​கான ​வாய்​ப்​பை இழக்​க நேரிடும்​. இத​னால்​ அந்​த அணி கூடு​தல்​ கவமுடன்​ செயல்​படக்கூடும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here